இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது 20-20 போட்டி இன்று கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரவு 7.00 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இலங்கை அணி இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ள நிலையில் இன்றைய போட்டியிலாவது வெற்றி பெறுமென ரசிகர்கள் எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர்.
இரு அணிகளும் மாற்றங்களின்றி அதே அணிகளுடன் களமிறங்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றன. இலங்கை அணி சார்பாக மதீஷ பத்திரனவுக்கு வாய்ப்பு வழங்கி பார்க்கலாம். ஆனால் உபாதையடைந்துள்ளார். துடுப்பாட்ட வீரர்கள் தமக்கான வாய்ப்பை நிரூபிக்க இது இறுதி வாய்ப்பு. குறிப்பாக பானுக்க ராஜபக்ஷ இன்று தன்னுடைய திறமையினை வெளிக்காட்டவே வேண்டும். சர்ச்சைகளின் பின்னர் அணிக்குள் வந்தவர் பிரகாசிக்க தவறினால், அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டமை சரியானது என உறுதியாகும்.
சர்வதேசப் போட்டிகள் என்றதும் வீரர்களுக்குள் பதட்டம் ஏற்படுகிறது. பதட்டமின்றி, நுட்பமாக சிந்தித்து விளையாடினால் ஓட்டங்களை பெற முடியும். அதனை இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் செய்ய தவறுகின்றனர்.
கடந்த போட்டி போன்றே இந்தப் போட்டியிலும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீச வேண்டும். சமிக்க கருணாரட்னவின் பந்துவீச்சை முறையாக பாவிக்முறையாக பாவிக்க வேண்டும். எந்த துடுப்பாட்ட வீரரும் நூறு சதவீதம் நம்பிக்கை தரக்கூடியளவில் இல்லை.