ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள தம்மிக்க பெரேராவின் கொழும்பு, கறுவா தோட்ட வீட்டுக்கு முன்னாள் குழுவொன்று போராட்டத்தில் ஈடுபட்டது.
தம்மிக்க பெரேரா தேசிய பட்டியல் மூலமாக பாரளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவரகள் “வரி மோசடி செய்த தம்மிக்க வேண்டாம்”, “தேசிய பட்டியலை இரத்து செய்”, “திருடன் தம்மிக்க வேண்டாம்” போன்ற கோஷங்களை எழுப்பியும் பதாதைகளை காட்சிப் படுத்தியும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனரர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டக்காரர்கள் தம்மிக்க பெரேராவின் வீட்டின் முன்னதாக குழுமியதனை தொடர்ந்த்து பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அந்த இடத்துக்கு அழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்த போராட்டத்தை செய்தி சேகரிப்பதற்காக சென்ற டெய்லி மிரர் ஊடகவியலாளர் ஜமீலா ஹுசைன் போராட்ட காரர்களினால் செய்தி சேகரிக்க முடியாமல் தடுக்கப்பட்டதாகவும், கோஷங்களை எழுப்பி அச்சுறுத்தியனை தொடர்ந்து அந்த இடத்திலிருந்து அவர் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை டெய்லி மிரர் செய்தியாக வெளியிட்டுள்ளது.
