IND v SA – இந்தியா துடுப்பாட்டம் நிறைவு

இந்தியா தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20-20 போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றது. தென்னாபிரிக்கா அணியின் பலமான பந்துவீச்சின் மூலம் இந்தியா அணியின் ஓட்ட எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் கட்டாக் மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு சாதக தன்மையினை வழங்கக்கூடிய மைதானம்.

துடுப்பாட்டத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் 40 ஒட்டங்களையும், இஷன் கிஷன் 34 ஓட்டங்களையும், பெற்றனர். டினேஷ் கார்த்திக் ஆட்டமிழ்க்காமல் 30 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில் அன்றிச் நோக்யா இரண்டு விக்கெட்களையும், கிகிஸோ றபாடா , வெய்ன் பார்னல், , கேஷவ் மஹாராஜ், டுவைன் பிரிட்டோரியஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இரு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்று 5 போட்டிகளடங்கிய தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்தியா அணி மாற்றங்களின்றி விளையாடும் அதேவேளை தென்னாபிரிக்கா அணி இரண்டு மாற்றங்களை செய்துள்ளது. குயின்டன் டி கொக் இன்று விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ரீஷா ஹென்றிக்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். ரிஸ்டன் ஸ்டப்ஸ் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஹென்றிச் க்ளாஸன் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்தியா
1 ருதுராஜ் கெய்க்வாட், 2 இஷன் கிஷன், 3 ஷ்ரேயாஸ் ஐயர், 4 ரிஷாப் பான்ட்(தலைவர், வி.கா), 5 ஹார்டிக் பாண்ட்யா, 6 தினேஷ் கார்த்திக், 7 ஹர்ஷால் பட்டேல், 8 புவனேஷ்வர் குமார், 9 அவேஷ் கான், 10 அக்ஷர் பட்டேல் 11 யுஸ்வேந்திர சஹால்

தென்னாபிரிக்கா

1 ரீஷா ஹென்றிக்ஸ், 2 3 டெம்பா பவுமா, 4 அன்று நோக்ஜா , 5 ரஸ்ஸி வன் டு டுசென் 6 டேவிட் மில்லர், 7 டுவைன் பிரிட்டோரியஸ், 8 ககிசோ றபாடா, 9 வெய்ன் பார்னல், 10 கேஷவ் மஹாராஜ் 11 ரப்ரைஸ் ஷம்சி

Social Share

Leave a Reply