அமெரிக்க விவாசாய திணைக்களத்தினால் இலங்கையில் பாலுணவு உற்பத்தியினை மேம்படுத்த உதவி திட்டம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. 27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியுடைய இந்த உதவி திட்டம் வழங்குவதறகான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் பால் உற்பத்தி மற்றும் பாலுணவு உற்பத்தியினை இரட்டிப்பாக்கவே இந்த திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது.
கொரோனா சூழ்நிலை நிலை காரணமாக தாமதித்த இந்த திட்டம் தற்போது கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த உதவி திட்டத்தின் மூலம் 80,000 பாலுணவு உற்பத்தியுடன் தொடர்புடையவர்கள் பலன்களை பெறுவார்கள் என நம்புவதாக இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜுலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த அமெரிக்காவின் பங்களிப்புக்கான சிறந்த உதாரணம் இதுவெனவும், இந்த உதவி திட்டம் தனியே உற்பத்திகளை அதிகரிக்க மட்டுமல்லாமல் பலருக்கும் வேலை வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது.
இலங்கையுடனான நெருக்கமான நட்புறவு அடிப்படையில் 2017 ஆம் ஆண்டு இந்த நிகழ்ச்சி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் 25,000 பயனாளர்கள் பலன்களை பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக 68 சதவீதமாக பால் மற்றும் பாலுணவு உற்பத்திகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான வேலைத்திட்டங்களின் மூலமாக பாலுடன் தொடர்புடைய தயாரிப்புகளை பண்ணையாளர்கள் உற்பத்தி செய்யவும், உற்பத்திகளை மேம்படுத்தவும் உதவும் அதேவேளை, புதிய சந்தை வாய்ப்புக்குகளையும் அவர்கள் பெறுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க தூதுவர் கூறினார்.
