இந்த வாரம் முதல் வெள்ளிக்கிழமை தினங்கள் அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுசேவைகள் அமைச்சர் டினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
சுகாதர சேவைகள், கல்விச் சேவை, வலுசக்தி, போக்குவரத்து, நீர், மின்சாரம், துறைமுகம், விமானநிலையம், பாதுகாப்பு ஆகிய துறைகளுடன் அத்தியாவசிய சேவைகளுக்கு விடுமுறை வழங்கப்படாது எனவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச உத்தியோகத்தர்கள் எரிபொருள் சிக்கல் நிலை காரணமாக போக்குவரத்து சேவைகளை பெறுவதில் சிக்கல் நிலைகளை எதிர் கொள்வதானால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
உணவு தட்டுப்பாட்டை ஈடு செய்ய, தங்களுக்கு தேவையான உணவு தயாரிப்புக்களில் ஈடுபடுவதற்கு அரசாங்க உத்தியோகஸ்தர்களை ஊக்குவிக்கும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவும் அரசாங்கம் முயற்சிக்கின்றது.
