இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமையினால் வெளிநாடு செல்பவர்களின் தொகை அதிகரித்து வருகிறது. அதேபோல சட்ட விரோதமாக வெளிநாடு செல்பவர்களது தொகையும் அதிகரித்து வருகிறது. அவ்வாறு திரிகோணமலை கடடலினூடாக இன்று (15.06) சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 64 பேர் திருகோணமலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 64 சந்தேகநபர்களும் திருகோணமலை, மூதூர் இலங்கை துறைமுகத்துவாரம் பிரதேசத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
11 பெண்கள், 3 சிறுவர்கள் அடங்களாக மொத்தம் 64 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை கடற்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர்களை திருகோணமலை துறைமுக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
