வவுனியாவில் எரிபொருளில்லாததனால் பதட்டமான சூழ்நிலை

வவுனியா நகர மத்தியில், பழைய பஸ் நிலையம் முன்பாக உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் கோரி மக்கள் முரண்பட்டமையால் பதற்ற நிலை ஏற்பட்டு பொலிஸார் வருவகையின் பின்னர் சுமூக நிலைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்த வவுனியா பொலிஸார் நிலைமையினை கட்டுக்குள் கொண்டு வந்ததோடு ஒன்று கூடிய மக்களினை அப்பகுதியில் இருந்து கலைந்து செல்ல உத்தரவிட்டிருந்தனர்.

அதன் பின்னர் மக்கள் அப்பகுதியில் இருந்து கலைந்து சென்றிருந்தனர். வவுனியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருள் நிலையங்களின் முன்னாள் தொடர்ந்தும் முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன.

வவுனியாவில் எரிபொருளில்லாததனால் பதட்டமான சூழ்நிலை

Social Share

Leave a Reply