இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்திலிருத்து மக்கள் இலங்கையிலிருந்து சட்ட விரோதமான முறையில் உயிரை பணயம் வைத்து தமிழகத்திற்கு செல்கின்றனர்.
இந்த நிலையில் தமிழகம், தனுஷ்கோடிக்கு இன்று வெள்ளிக்கிழமை (17.06) இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஒரு ஆண், இரண்டு பெண்கள், 4 குழந்தைகள் உட்பட 7 பேர் சென்று தஞ்சம் அடைந்துள்ளனர்.
கடற் பாதுகாப்பு காவல் துறையினர் தஞ்சமடைந்தவர்களை மீட்டு, பொலிஸ் நிலையத்தில் விசாரணைகளை முடித்த பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தஞ்சமடைந் துள்ளவர்கள் வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த 2 குடும்பங்களை சேர்ந்த 7 பேர் என தெரிய வந்துள்ளது.
