20 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இரு வாரங்களுக்கு பாடசாலைகள் மற்றும் அரச அலுவலங்கள் இயங்காது எனவும், வீட்டிலிருந்து வேலைகளை செய்யுமாறும் சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுசேவைகள் அமைச்சினால் இந்த சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் சிக்கல் நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அத்தியாவசிய சேவைகளுக்கான அலுவலங்கள் வழமை போன்று நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
