எரிபொருள் சிக்கல் நிலை காரணமாக பாடசாலைகளை மூடுவது தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொழும்பு நகரம் மற்றும் நகரை அண்டிய பாடசாலைகளை மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ரீதியில் முக்கிய நகரங்களது பாடசாலைகளை மூடலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை அதிபார்கள் மற்றும் வலைய கல்வி பணிப்பாளர்கள் தத்தமது பகுதிக்கான முடிவுகளை எடுக்கலாமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. கிராம மட்ட பாடசாலைகளை நடாத்துவது தொடர்பில் அதிபர்கள் முடிவெடுக்கலாமெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுளள்து.
20 ஆம் திகதி முதல் அரச அலுவலங்கங்கள் மற்றும் கல்வி சேவை அலுவலகங்கள் இரண்டு வாரங்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது. பொது சேவைகள் அமைச்சினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அறிவித்தல்கள் மாறி மாறி விடப்படுவதனால் மக்களக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குழம்பி போயுள்ள மக்களுக்கு இவ்வாறான குழப்பமான அறிவித்தல்கள் மேலும் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
