எரிபொருள் நிலைய நிலக்கீழ் தாங்கிகளை திறக்கவேண்டாமென பொலிசுக்கு அறிவுறுத்தல்

எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் சேமித்து வைக்கும் நிலக்கீழ் தாங்கிகளை திறந்து மக்களுக்கு காட்டும் செயற்பாடுகளை செய்ய வேண்டாமென பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் பொலிசாருக்கு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அத்தோடு பொலிசாரிடம் தாங்கிகளை திறந்து காட்டுமாறு கோர வேண்டாமென வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.

தாங்கிகளை திறந்து சோதிப்பது பொலிசாரின் கடமையல்ல எனவும், அவ்வாறு திறந்து பார்வையிடும் போது ஏதாவது விபத்துக்களோ, விபரீத சம்பவங்களோ இடம்பெற்றால் அது பொலிசாரின் பொறுப்பாகி விடுமெனவும், அதற்குரிய அதிகாரிகள் அந்த கடமைகளை செய்வார்கள் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளை வைத்துக்கொண்டு வழங்குவதில்லை றன மக்கள் குற்றம் சாட்டும் அதேவேளை, எரிபொருள் சேமிப்பு தாங்கிகளை பொலிசார் திறந்து காட்டுமாறு மக்கள் அழுத்தம் வழங்கி, திறந்து காட்டப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்ற நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எரிபொருள் நிலைய நிலக்கீழ் தாங்கிகளை திறக்கவேண்டாமென பொலிசுக்கு அறிவுறுத்தல்

Social Share

Leave a Reply