எலியந்த வைட்டுக்கு லசித் மாலிங்க நன்றியுடன் அஞ்சலி

நேற்று (23.09.2021) மருத்துவர் எலியந்த வைட் கொரோனா தொற்று காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் காலமானார். இலங்கையின் பிரபல ஆன்மீக மற்றும் மூலிகை வைத்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனியான சிறப்பு மருத்துவராகவும் இவர் செயற்பட்டவர். லசித் மாலிங்க கால் உபாதை காரணமாக 2008 ஆம் ஆண்டு அவதிப்பட்ட போது அவரை குணமாக்கியது எலியந்த வைட்.

அவரினாலேயே தான் மீண்டும் கிரிக்கெட் விளையாட முடிந்ததாகவும், பல உயரங்களை தொட முடியாந்ததாகவும் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார். குணமாக்குவது கடினம் என்ற நிலையில் தன்னை பூரண குணப்படுத்தி மீண்டும் கிரிக்கெட் வாழ்வை தந்தவரை தான் வாழ் நாள் முழுவதும் மறக்கமாட்டேன் எனவும் நன்றியுடையவனாக இருப்பேன் எனவும் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

எலியந்த வைட்டுக்கு லசித் மாலிங்க நன்றியுடன் அஞ்சலி

Social Share

Leave a Reply