நேற்று (22.09.2021) பாராளுமன்ற அமர்வின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேசுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க விற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்போது “அந்த பைத்தியக்காரனை அமர சொல்லுங்கள்” என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை தோட்ட தொழிலார் சங்க அலுவலகத்துக்குள் ஐக்கிய தேசிய கடசியின் முக்கியஸ்தர்கள் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் தனக்கு நீதி கிடைக்க வேண்டுமென வடிவேல் சுரேஷ் கேட்ட போது, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதனால் அது முடிவடைந்த பின்னரே அது பற்றி பேச முடியுமென ரணில் விக்ரமசிங்க தெரிவித்த போதே வடிவேல் சுரேஷ் குறுக்கிட்டு “தான் தொழிற்சங்க வாதி. தனக்கு நீதி கிடைக்க வேண்டும். அதனை ரணில் விசக்ரமசிங்கவினால் தடுக்க முடியாது” என குரல் எழுப்பவே மேற்கண்டவாறு ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
