இலங்கை மின்சாரசபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்ட் வெளியிடட சர்ச்சை கருத்துக்களை பாராளுமன்ற பொது நிறுவனங்களது குழு (கோப்) மறைப்பதாக நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் குற்றம் சுமத்தியிருந்தார்.
“கடந்த கோப் குழு கூட்டத்தில் மின்சார சபையின் தலைவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்தை ஊடகங்களுக்கு வழங்காது தடை செய்ததை வன்மையாகக் கண்டிப்பதாகவும், இது போன்ற தகவல்களை பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு தடை செய்யும் அதிகாரம் கோப் குழுவுக்கோ அல்லது அதன் தலைவருக்கோ கிடையாது எனவும், அந்தத் தகவலை அறிய பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் உரிமை உண்டு” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நிகழ்வொன்றில் கூறியதனை ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.
இந்த கருத்துக்கு கோப் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரித் ஹேரத் பதில் வழங்கியுள்ளார். “தங்களால் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் தவறான புரிதலை ஏற்படுத்துவதாகவும், இந்த விடயம் தொடர்பில் தங்களது கட்சி உறுப்பினர்களை கேட்டு அறிந்து கொள்ள முடியுமெனவும், அதன் மூலமாக சரியான விம்பத்தை தாங்கள் பெற்றுக் கொள்வீர்கள்” என அவர் ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.
“தன்னுடைய தலைமையின் கீழ் எந்த விடயங்களும் மூடி மறைக்கப்படவில்லை எனவும், சகல விடயங்களும் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது என்ற உண்மையினை நாடே அறியுமெனவுவம் அவர் மேலும் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்தி