கடந்த வாரம் மூடப்பட்டிருந்த கொழும்பு நகர பாடசாலைகளும், மற்றைய முக்கிய நகர பாடசாலைகளும் இந்த வாரமும் மூடப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. நேற்றைய தினம் மூன்று தினங்களுக்கு பாடசாலைகள் நடாத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த பொழுதும், அந்த அறிவிப்பு மாற்றப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் 27 ஆம் திகதி முதல் முதலாம் திகதி வரை கடந்த வாரம் நடைபெற்றது போலவே பாடசாலைகள் நடைபெறுமெனவும், விடுமுறை வழங்கப்பட்டு இணைய வழி கல்வி நடவடிக்கைகள் நடைபெற்றது போன்றே தோடர்ந்தும் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற பாடசாலைகள் செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் வழமை போன்றே பாடசாலைகள் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் நடாத்தப்படுவதற்கான அறிவுறுத்தல்கள்
- 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை ஆசிரியர்கள் போக்குவரத்துக்கு சிக்கல்களை எதிர்கொண்டால் நேர சூசியினை அதிபர்கள் இலகுபடுத்தி வழங்கலாம்.
- நகர்ப்புற பாடசாலைகளில் கடந்த வாரம் நடாத்தப்பட்ட பாடசாலைகள் இந்த வாரம் செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் நடாத்தாப்படவேண்டும். ஆரம்ப பாடசாலைகளை நடாத்துவது தொடர்பில் அதிபர்கள் முடிவெடுக்கலாம்.
- போக்குவரத்து சிக்கலினால் பாடசாலைக்கு செல்லாத ஆசிரியர்களது விடுமுறை தனிப்பட்ட விடுமுறையாக கணிக்கப்படாது.
- சிக்கலான நிலையிலும் 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை பாடசாலை நடாத்திய அதிபர்கள், ஆசிரியர்களுக்கு கல்வியமைச்சு தனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறது.
