போக்குவரத்து கட்டணங்கள் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 30 சதவீதத்தினால் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் அதேவேளை, ஆரம்ப கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைசசர் பந்துல குணவர்தனவுக்கும், தேசிய போக்குவரத்து ஆணையகம், இலங்கை போக்குவரத்து சம்மேளனம் மற்றும் தனியார் போக்குவரத்து சங்கம் ஆகியோருக்கிடையில்இன்று நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த கட்டண அதிகரிப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
