எரிபொருள் விநியோகம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கட்டாருக்கு சென்றுள்ள வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர, கட்டார் நாட்டின் வலுசகதி அமைச்சரும், கட்டார் பெற்றோலிய நிறுவனத்தின் தலைவருமான ஷெரிடால் அல் காபி ஐ சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எரிபொருள் மற்றும் பெற்றோலிய பொருட்களை விநியோகம் செய்வது தொடர்பிலும், சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜயசேகர ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரா மற்றும் எரிபொருள் நெருக்கடிக்கு கட்டார் வலுசக்தி மற்றும் கட்டார் அபிவிருத்தி நிதி மூலம் இலங்கைக்கு உதவுவது தொடர்பிலும் பேசப்பட்டதாக காஞ்சன மேலும் கூறியுள்ளார்.
கலந்துரையாடலில் கட்டார் அமைச்சரது பதில்கள் அல்லது அவர்களது நிலைப்பாடுகள் தொடர்பில் எந்த தகவலையும் காஞ்சன விஜயசேகர தெரிவிக்கவில்லை.
