30,000 மெற்றிக் தொன் டீசல் ஜூலை மாதம் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு வரவுள்ளதாகவும், ஜூலை 22 ஆம் திகதி பெற்றோல் கப்பல் வரவுள்ளதாவும், பிரதமரின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ள்ளார். அரசாங்கம் 10 ஆம் திகதி பெற்றோல் கப்பல் ஒன்றை நாட்டுக்கு கொண்டு வர முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜூலை 22 ஆம் திகதி இந்தியாவிலிருந்து கப்பல் ஒன்று வருகை தருமெனவும், நிரந்தரமாக பெற்றோல் வருகை தருவதற்கான உறுதியான வாய்ப்புகள் இல்லை என அவர் கூறியுள்ளார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு வெளிநாடுகளில் ஏரளமான தொடர்புகள் இருப்பதாகவும் அதற்கு முன்னதாக பெற்றோலை கொண்டுவந்து விடுவார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உலக சந்தையில் எரிபொருளுக்கான அதிகரித்த கேள்வியே எரிபொருளை உடனடியாக பெறுவதில் நிலை காணப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் 11000 மெற்றிக் தொன் டீசல், 30,000 மெற்றி தொன் பியுரன்ஸ் ஒயில், 800 மெற்றிக் தொன் விமான எரிபொருள், 5,000 மெற்றிக் தொன் பெற்றோல் ஆகியனவே கையிருப்பில் இருப்பதாக கூறியுள்ளார். கையிருப்பில் உள்ள இந்த தொகை அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுமென கூறியுள்ளார்.
சமையல் எரிவாயுவினை விநியோகப்பதில் ஜூலை மாதம் சிக்கல் நிலை காணப்படாதென சாகல ரத்நாயக்க கூறியுள்ளார். ஜூலை மாதம் 6 , 10, 16, 19, 21, 31 ஆம் திகதிகளில் சமையல் எரிவாயு கப்பல்கள் வரவுள்ளதாகவும், 100,000 மெற்றிக் தொன் சமையல் எரிவாயு மொத்தமாக வருகை தரவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
முன்னுரிமையின் அடிப்படையில் சமையல் எரிவாயு அத்தியாவசிய தேவைகளுக்கு வழங்கப்படுமெனவுவம், அதன் பின்னர் கொழும்புக்கும் பின்னர் ஏனைய பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படும் எனவும் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.