வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்களுக்கு விசேட கொடுப்பனவு

இந்த மாதம் முதல் வறுமை கோட்டுக்கு உட்பட்டவர்களுக்கு விசேட கொடுப்பனவாக 7500 ரூபா வழங்கப்படவுள்ளதாக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

பாதிப்புக்குள்ளான மக்களுக்கு கை கொடுக்க இந்த திட்டம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் உதவிகளோடு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூர்த்தி பயனாளர்கள், சிரேஸ்ட பிரஜைகள், மருத்துவ உதவிகள் பெறுவோர் போன்றவர்களுக்கு இந்த உதவி வழங்கப்படவுள்ளது.

வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்களுக்கு விசேட கொடுப்பனவு

Social Share

Leave a Reply