பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியாவிட்டால் உடனடியாக பதவி விலக வேண்டுமென கோரி அவரின் கொழும்பு, கொல்லுபிட்டி 5 ஆம் ஒழுங்கை வீட்டின் முன்னதாக போராட்டம் ஒன்று நடைபெற்றுளளது.
நேற்று(05.07) இரவு 7.30 இற்கு இந்த போராட்டம் ஆரம்பித்து நடைபெற்றுள்ளது. ரணிலை பதவி விலக கோரும் பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர். விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தன. அமைதியாக நடைபெற்ற போராட்டம் 1 1/2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது.
