இலங்கை, அவுஸ்திரேலியா இரண்டாம் டெஸ்ட் முதல் நாள் நிறைவு

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் நிறைவுபெற்றுள்ளது.

அவுஸ்திரேலியா ஆனி சிறப்பான ஆரம்பத்தை முதல் நாளில் பெற்றுள்ளனர். முதல் இன்னிங்சில் துடுப்பாடி வரும் அவுஸ்திரேலிய அணி 90 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 298 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதில் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 109 ஓட்டங்களையும், மார்னஸ் லபுஷேன் 104 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஸ்டீவ் ஸ்மித் அவரின் 28 ஆவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். மாரன்ஸ் லபுஷேன் அவரின் 7 ஆவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். பந்துவீச்சில் அறிமுக போட்டியில் விளையாடும் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். ரமேஷ் மென்டிஸ், கஸூன் ராஜித்த ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்கள்.

நாளை 9/7/2022 10.00 மணிக்கு இரண்டாம் நாள் ஆரம்பமாவுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இலங்கை அணியின் வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மூன்று வீரர்களுக்கு அறிமுகம் வழங்கப்பட்டுள்ளது. மஹேஷ் தீக்ஷன, பிரபாத் ஜயசூரிய, கமிந்து மென்டிஸ் ஆகியோர் டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொள்கின்றனர். கசுன் ராஜித அணியில் இணைக்கப்ட்டுள்ளார்.

கடந்த போட்டியின் நடுவே கொரோனா காரணமாக மாற்றபப்ட்ட அஞ்சலோ மத்தியூஸ் இந்த போட்டியில் விளையாடுகிறார்.

அவுஸ்திரேலிய அணி மாற்றங்களின்றி அதே அணியுடன் விளையாடுகிறது.

அணி விபரம்

இலங்கை: 1 பத்தும் நிசாங்க, 2 திமுத் கருணாரட்ன (தலைவர்), 3 குசல் மெண்டிஸ், 4 அஞ்சலோ மத்தியூஸ், 5 தினேஷ் சந்திமால். 6 கமிந்து மென்டிஸ், 7 நிரோஷன் டிக்வெல்ல (வி.கா), 8 ரமேஷ் மென்டிஸ், 9 மஹேஷ் தீக்ஷனா, 10 பிரபாத் ஜயசூரிய, 11 கசுன் ராஜித

அவுஸ்திரேலியா: 1 டேவிட் வார்னர், 2 உஸ்மான் கவாஜா, 3 மார்னஸ் லபுஷேன், 4 ஸ்டீவன் ஸ்மித், 5 டிரவிஸ் ஹெட், 6 கமரூன் கிரீன், 7 அலெக்ஸ் கேரி (வி.கா), 8 மிட்செல் ஸ்டார்க், 9 பட் கம்மின்ஸ் (தலைவர்), 10 நேதன் லியோன், 11 மிட்செல் ஸ்வெப்சன்

இலங்கை, அவுஸ்திரேலியா இரண்டாம் டெஸ்ட் முதல் நாள் நிறைவு

Social Share

Leave a Reply