ஜூலை 9 போராட்டம் இன்று அதிகாலை முதலே பல இடங்களிலும் ஆரம்பித்துள்ளன. அனைத்து பல்கலை கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்று ஆரம்பித்த போராட்டம் முடிவின்றி இரவு இரவாக நடைபெற்று வருகிறது. கொழும்பிலும், கொழும்பை அண்டிய பகுதிகளிலும் உள்ளவர்கள் ஏற்கனவே காலி முகத்திடல், அலரி மாளிகை பகுதிகளில் ஒன்று கூட ஆரம்பித்துள்ளனர்.
புகையிரதங்கள் ஊடாகவும், பேரூந்துகள் ஊடாகவும் பலர் கொழும்பு நோக்கி வருகை தருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பை அண்மித்த பல இடங்களில் பேரணிகளாக மக்கள் தங்களது போராட்டங்களை ஆரம்பித்து நடை பவனியாக கொழும்பை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.
மக்கள் சுயாதீனமாகவும், குழுக்களாகவும், அமைப்புகளாகவும், அரசியல் கட்சிகள் தங்கள் ஆதரவாளர்களுடனும், போராட்டங்கள், பேரணிகளை ஆரம்பித்துள்ளனர்.