தம்மிக்க பெரேரா பதவி விலகினார்.

இலங்கையின் பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வு வழங்குவார் என்ற எதிர்பார்ப்போடு தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்றத்துக்கு சென்று, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சர் தம்மிக்க பெரேரா தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

அமைச்சராக பதவியேற்றதும் வேகமான சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் நிதியமைச்சு பதவியிலிருந்து விலகவேண்டும் என கூறியிருந்தார். அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஏமாற்றம் தருவதாகவும், தானும் போராட்ட களத்தில் களமிறங்க வேண்டி வருமெனவும் கூறியிருந்தார்.
நேற்றைய போராட்டத்தின் பின்னரான ஜனாதிபதி பதவி விலகலை தொடர்ந்து தம்மிக்க பெரேரா இன்று தனது பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர்கள் பந்துலக குணவர்தன, ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, மஹிந்த அமரவீர ஆகியோர் தங்களது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்வதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

தம்மிக்க பெரேரா பதவி விலகினார்.

Social Share

Leave a Reply