இலங்கைக்கான ப்ளய் டுபாய் விமான சேவை இரத்து

டுபாய் நாட்டின் விமான சேவையான ப்ளய் டுபாய் விமான சேவை இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்தியுளளதாக அறிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலை காரணமாக விமான சேவையினை இரத்து செய்துள்ளதாக அந்த விமான சேவையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார சிக்கல் நிலை, விமான எரிபொருளை இலங்கையில் பெற முடியாத நிலை, போராட்ட காரர்கள் ஜனாதிபதி மாளிகையினை கைப்பற்றியுள்ளமை போன்றன விமான சேவை நிறுத்தப்பட்டமைக்கான காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

தங்கள் விமான சேவையில் டிக்கெட் பதிவுகளை மேற்கொண்டவர்கள் பணத்தினை மீள பெறமுடிடியுமெனவும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு தாங்கள் மன்னிப்பு கோருவதாகவும் குறித்த விமான சேவை கூறியுள்ளது.

இலங்கைக்கான ப்ளய் டுபாய் விமான சேவை  இரத்து

Social Share

Leave a Reply