30 வருடமாக பதவி ஆசையில், ஜனாதிபதி ஆசையிலிருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து விலகுவார் என தான் நம்பவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
போராட் காரர்களுக்கும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் நடைபெறும்கூட்டத்திலேயே இந்த விடயங்களை அவர் முன் வைத்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க பதவி ஆசை பிடித்தவர். வெட்கமற்றவர். ஜனாதிபதியாக அவர் பதவியேற்றால் அவரை பதவியிலிருந்து நீக்க முடியாது.
நாளை ஜனாதிபதி பதவி விலகினால், அவர் ஜனாதிபதியாவதானை யாரும் தடுக்க முடியாது. அதன் பின்னர் போராட்டங்களை நடாத்தி அவரை பதவி விலக செய்வது பிழையான உதாரணமாக மாறிவிடும். போராட்டங்கள் மூலம் ஆட்சிக்கு வருபவர்களை பயப்படுத்தி பதவி விலக செய்ய முடியுமென்ற நிலை ஏற்படும்.
ஆகவே ஜனாதிபதி பதவி விலகிய உடனேயே ரணில் விக்ரமசிங்கவின் பதவி விலகல் கடிதத்தையும் பெற வேண்டுமெனவும், அதற்கான வேலைத்திட்டத்தை தற்போதே ஆரம்பிக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார். முக்கியமாக போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் அதற்கான அழுத்தங்களை வழங்க வேண்டும் எனவும் சாணக்கியன் கூறினார்.
