ஜனாதிபதியின் இறுதி வேலையாக பிரதமரை பதவி நீக்கம் செய்ய கோரிக்கை.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நாளை (13.07) பதவி விலகுவதற்கு முன்னதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸ்ஸாநாயகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இறுதி வேலையாக இதனை செய்யவேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நடைபெறாவிட்டால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உடனடியாக பதவி விலக வேண்டுமென அனுரகுமார மேலும் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க பதவி விலகாவிட்டால், பிரதமர் பதில் ஜனாதிபதியாக பதவியேற்றால் நாட்டில் மேலும் போராட்டங்கள் நடைபெறுமென அனுரகுமார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 69 இலட்சம் வாக்குகளுடன் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தெரிவானவர். இன்று எங்கிருக்கிறார் என தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏதாவது முறையில் ஜனாதிபதியாக வர முயற்சி செய்தால் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு நடந்தவற்றிலும் பார்க்க மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டுமென கூறியுள்ளார்.

மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் அவர்களை கஷடப்படுத்தாமல், பதவி விலகவேண்டுமெனவும் பாராளுமன்றத்தில் உள்ளவர்களும் அதற்கு ஏற்றால் போல செயற்படவேண்டுமெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் இறுதி வேலையாக பிரதமரை பதவி நீக்கம் செய்ய கோரிக்கை.

Social Share

Leave a Reply