நேற்று 13 ஆம் திகதி, தான் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ 13 ஆம் திகதி நிறைவடைந்துள்ள நிலையில் பதவி விலகவில்லை. சபாநாயகருக்கு தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்புவதாகவும், அதனை சபாநயாகர் அறிவுப்பு செய்வார் என்றுமே அறிவிக்கப்பட்டிருந்தது.
வெளிநாடு சென்றடைந்ததும் அவர் பதவி விலகுவார் என நம்பப்பட்டது. ஆனால் அதுவும் நடைபெறவில்லை. மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இன்று அதிகாலை 4 மணிக்கே மாலைதீவிலிருது சிங்கப்பூர் செல்லும் விமானம் சென்றடையும் என நம்பப்படுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தான் வெளிநாடு செல்வதாகவும், அதன் காரணமாக பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதாகவும் அதி விசேட வர்த்தமானி மூலம் இன்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பில் அவரது பதவி விலகல் தொடர்பில் எந்த அறிவிப்பையும் தெரிக்கவில்லை. இவ்வாறான நிலையில் அவர் பதவி விலகுவது சந்தேகமா என்ற கேள்வியெழுந்துள்ளது.
