மாலைதீவிலிருந்து சிங்கபூருக்கு செல்வதற்ககு பொது விமானத்தில் செல்வதனால், மக்களினால் ஆபத்துகள் ஏற்படுமென்ற பயத்தினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனி ஜெட் விமானம் ஒன்றை கோரியுள்ளதாக இந்தியாவின் NDTV ஊடகம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மாலைத்தீவு விமான நிலையத்தில் கடும் பாதுக்காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிவேளை அங்கு சென்றிருந்த ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தனி விமானத்தில் செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
