இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜுலை மாதம் 14 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பதவி விலகியுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
புதிய ஜனாதிபதியை நியமிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகவும் மேலும் அவர் கூறியுள்ளார். கட்சி தலைவர்களது கூட்டத்தில் புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பான நடவடிக்கைள் எடுக்கப்படுமென தெரிவித்துள்ள சபாநாயகர் இலங்கை சட்டங்களுக்கு அமைவாக பிரதமர் தொடர்ந்தும் நாட்டின் தலைவராக கடமையாற்றுவார் என அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பதவி விலகலை தொடர்ந்து நாளை சனிக்கிழமை காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவி விலகியுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக இன்று பதவியேற்றகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
