இலங்கை அணி கவலைக்கிடமான நிலையில்

(காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலிருந்து)

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று(16.07) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடி வரும் இலங்கை அணி மிகவும் மோசமாக துடுப்பாடி வருகிறது. ஓஷட பெர்னான்டோ நல்ல ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்த போதும் 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மற்றைய துடுப்பாட்ட வீரர்கள் சரியான முறையில் துடுப்பாட தவறியமையினால் இலங்கை அணி மதியபோசனம் வரையில் 04 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

பாகிஸ்தான் அணியின் நேர்த்தியான பந்துவீச்சு இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களை தடுமாற வைத்துள்ளது. துடுப்பாட்ட வீரர்களின் பிழையான துடுப்பாட்ட பிரயோகங்களும் இலங்கை அணியின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்துள்ளது.

மைதானத்தில் மழைக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. இருப்பினும் நிச்சயம் மழை பெய்யுமென கூறிவிட முடியாது. காலியில் காலை வேளையில் பல இடங்களிலும் மழை பெய்த போதும், மைதான பகுதியில் மழை பெய்யவில்லை. கடும் மழை பெய்யும் வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

முழுமையான ஸ்கோர் விபரம்.

 வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
1ஓஷட பெர்னாண்டோபிடி – ரிஷ்வான்ஹசன் அலி354950
2திமுத் கருணாரட்ணBowledஷஹீன் அப்ரிடி010700
3குசல் மென்டிஸ்பிடி – ரிஷ்வான்யாசிர் ஷா213530
4அஞ்சலோ மத்யூஸ்பிடி – நஸீம் ஷாயாசிர் ஷா01500
5தினேஷ் சந்திமல்  123210
6தனஞ்சய டி சில்வா  081310
7       
8       
9       
10       
11       
 உதிரிகள்  03   
 ஓவர் 25விக்கெட் – 04மொத்தம்80   
        
  பந்துவீச்சாளர் ஓவர் ஓ.ஓ  விக்
1ஷஹீன் ஷா அப்ரிடி 05012001
2ஹசன் அலி08011501
3நசீம் ஷா 04001700
4யாசிர் ஷா08022602
      

இலங்கை அணி விபரம் ; ஓஷட பெர்னாண்டோ, திமுத் கருணாரட்ண(தலைவர்), குசல் மென்டிஸ்(வி.கா), அஞ்செலோ மத்யூஸ், தனஞ்சய டி சில்வா, தினேஷ் சந்திமல்(வி.கா), நிரோஷன் டிக்வெல்ல(வி.கா), ரமேஷ் மென்டிஸ், மகேஷ் தீக்ஷண, பிரபாத் ஜயசூரிய, கசுன் ரஜித

பாகிஸ்தான் அணி விபரம் ; அப்துல்லா ஷபிக், இமாம்-உல்-ஹக், அசார் அலி, பாபர் அசாம் (தலைவர்), மொஹமட் ரிஸ்வான்(வி.கா), ஆகா சல்மான், மொஹமட்  நவாஸ், யாசிர் ஷா, ஹசன் அலி, ஷாஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா 

இலங்கை அணி கவலைக்கிடமான நிலையில்

Social Share

Leave a Reply