ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக பதவியேற்கிறார்.

பாராளுமன்றத்தில் நேற்று(20.07) ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க இன்று ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 14 ஆம் திகதி பதவி விலகியதனை தொடர்ந்து  பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த ரணில் விக்ரமசிங்க, அப்போதைய ஜனாதிபதியினால் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

 

அதனை தொடர்ந்து கடந்த 19 ஆம் திகதி பாரளுமன்றத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்க, டலஸ் அழகப்பெரும, அனுரகுமார திஸ்ஸாநாயக்கே ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளர்களாக  தெரிவு செய்யப்பட்டு நேற்று வாக்களிப்பு நடைபெற்றது. இதில் 134 வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

 

இன்று பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால், வர்த்தமானி மூலம் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டமை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இவ்வாறான நிலையில் இன்று எட்டாவது ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

 

 

Social Share

Leave a Reply