இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
இரு அணிகளும் தலா இவ்விரு மாற்றங்களை செய்துள்ளன.
பாகிஸ்தான் அணி சார்பாக உபாதையடைந்த ஷஹின் ஷா அப்ரிடிக்கு பதிலாக நௌமன் அலி இணைக்கப்பட்டுள்ளார். அஷார் அலி நீக்கப்பட்டு, பவாட் அலாம் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி சார்பாக கஸூன் ரஜித்த நீக்கப்பட்டு, அசித்த பெர்னாண்டோ சேர்க்கப்பட்டுள்ளார். மகேஷ் தீக்க்ஷனுக்கு பதிலாக இலங்கை அணியின் இளம் பந்துவீச்சாளர் டுனித் வெல்லாலகே சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி சார்பாக கஸூன் ரஜித்த நீக்கப்பட்டு, அசித்த் பெர்னாண்டோ சேர்க்கப்பட்டுள்ளார். மகேஷ் தீக்க்ஷனுக்கு பதிலாக இலங்கை அணியின் இளம் பந்துவீச்சாளர் டுனித் வெல்லாலகே சேர்க்கப்பட்டுள்ளார்.
போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர், தமது நூறாவது போட்டியில் விளையாடும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மத்தியூசுக்கு இலங்கை கிரிக்கெட் கெளரவம் வழங்கியிருந்தது. இலங்கை அணியின் முன்னாள் வீரர் சமிந்த வாஸ் மற்றும் இலங்கை கிரிக்கெட் உபதலைவர் ஜெயந்த தர்மதாச ஆகியோர் இந்த கெளவரத்தை வழங்கியிருந்தனர்.