சமையல் பாத்திரத்துக்குள் திடீரென வந்த துப்பாக்கி ரவைகள்!

முல்லைத்தீவு, கேப்பாபிலவு பகுதியில் வீடு ஒன்றிற்குள் தீடிரென வந்த துப்பாக்கி ரவைகள்; அச்சத்தில் குடும்பத்தினர்

24.07.2022 முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் இந்திராணி என்பவரின் வீட்டிற்குள் இன்று காலை எழும்பி பாக்கும் போது சமையல் அறையில் உள்ள பாத்திரம் ஒன்றில் பொலீத்தீன் பொதி ஒன்று காணப்பட்டுள்ளது.

உணவுப்பொதியாக இருக்கும் என நினைத்து அதனை அவர்கள் எடுத்து பார்த்தபோது அதற்குள் துப்பாக்கி ரவைகள் கணப்பட்டுள்ளன.

அனைத்தும் புதியதுப்பாக்கி ரவைகளாக காணப்படுவதுடன் இதனை யார் கொண்டு வந்து வைத்திருப்பார்கள் என்ற அச்சம் ஏற்பட்டதை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் அச்சமடைந்த குடும்பத்தினர் முள்ளியவளை பொலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Social Share

Leave a Reply