முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை சிங்கப்பூரில் கைது செய்ய கோரிக்கை 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக கூறி, அவரை கைது செய்யுமாறு சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான திட்டத்தின் வழக்கறிஞர்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

 

இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது கொலை, மரணதண்டனை, சித்திரவதை மற்றும் மனிதநேயமற்ற நடவடிக்கைகள், பாலியல் வன்புணர்வு, மற்றும் பிற பாலியல் வன்முறைகள், தனி மனித சுதந்திர மீறல், கடுமையான உடல் மற்றும் மனநல சித்திரவதைகள், பட்டினி போன்ற ஜெனிவா உடன்படிக்கைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களையும், சர்வதேச குற்றவியல் சட்டங்களையும்  கோட்டாபய ராஜபக்ச கடுமையாக மீறியதாக குற்றம் சுமத்தி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

2009 ஆம் ஆண்டு பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய வேளையில், மேற்கூறப்பட்ட குற்றங்களை புரிந்துள்ளதாகவும், சர்வதேச சட்ட வரைமுறைகளுக்குக்கு அடங்கலாக  சிங்கப்பூரின் சட்டங்களின் கீழ் இந்த குற்றங்களுக்காக கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்யுமாறு கோரி  63 பக்கங்களிலான மனுவில்    மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Social Share

Leave a Reply