நாட்டில் நிலவும் இந்த பொருளாதார நெருக்கடியின் போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர கோரிக்கையை கருத்திற் கொண்டு யாழ் காரைநகரை சேர்ந்தவரும் தற்போது சுவிஸ் நாட்டில் வசித்துவரும் சமூக சேவையாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் 24 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்து பொருட்களை வழங்கியுள்ளார்.
இந்த மருந்து பொருட்கள் கடந்த 21 ம் திகதி சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ஜானக ஸ்ரீ சந்திரகுப்தா மற்றும் டொக்டர் அன்வர் ஹம்தானி ஆகியோரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.
மேலும் இந்த இக்கட்டான தருணத்தில் இலங்கையில் தடையின்றி சுகாதார சேவைகளைப் பேணுவதில் சமூக சேவையாளர் வழங்கும் பங்களிப்பு முக்கியமானது. அத்துடன் அவரது ஆதரவை பாராட்டுவதாக வைத்திய சாலை பணிப்பாளர் தெரிவித்தார்.
