இலங்கை வங்கி ஊழியர் சங்க உறுப்பினர்கள் கைது.

இலங்கை வங்கி கிளை சங்கத்தின் செயலாளர் தனஞ்சய சிறிவர்தன மற்றும் இலங்கை வங்கி கிளை சங்கத்தின் முன்னாள் தலைவர் பாலித அடம்பாவல ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை மற்றும் காலை நேரங்களில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை தமக்கு தெரியாதெனவும், போராட்டங்களில் ஈடுபட்டமைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கலாமென குறித்த சங்கத்தின் தமிழ் பிரதிநிதி புருனு கார்த்திக் வி மீடியாவுக்கு தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென இலங்கை வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை வங்கி ஊழியர் சங்க உறுப்பினர்கள் கைது.

Social Share

Leave a Reply