காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள போராட்டகாரர்களின் கொட்டகைகள் மற்றும் விவாசாய தோட்டம் என்பன இம்மாதம் 10 ஆம் திகதி வரை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதென சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இந்த விடயத்தை அறிவித்துள்ள சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் மா அதிபருக்கு இந்த விடயம் தொடர்பில் அறிவித்தல் வழங்குவதாகவும் மேலும் மேன் முறையீட்டு நீதிமன்றில் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கால பகுதியினுள் குறித்த தற்காலிக கட்டுமானங்களை அகற்றுவது தொடர்பிலான ஆரம்ப சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியுமெனவும் மேன் முறையீட்டு நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.
இதேவேளை கட்டுமானங்களை இந்த கால பகுதியில் தாமாக போராட்ட காரர்கள் அகற்றுவதற்கு எந்த தடையுமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
காலி முகத்திடல் போராட்டக் களத்திலிருந்து மக்களை வெளியேறுமாறும், தற்காலிக கட்டடங்களை இன்று (05.08) மாலை 5.00 மணிக்கு முன்னர் அகற்றுமாறும் பொலிஸார் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணையின் போதே சட்டமா அதிபர் திணைக்களம் இந்த அறிவிப்பை வழங்கியுள்ளது.
