லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை நாளை (08.08) முதல் குறைக்கபபடவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். விலை சூத்திரத்தின் அடிப்படையில் லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை நிர்ணயிக்கப்படவுள்ளது. இதன் மூலம் 12.5 Kg எரிவாயுவின் விலை சுமார் 200 ரூபாவிலும் அதிகளவில் குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது .
கடந்த 22 நாட்களில் 27 லட்சம் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார் .
