முன்னாள் காதலனை பொலிஸ் நிலையத்தினுள் கொலை செய்த இந்நாள் காதலன்

அவிசாவல, நவகமுவ பொலிஸ் நிலையத்தினுள் வைத்து 52 வயதுடைய நபர் ஒருவர் கத்தி குத்து தாக்குத்தலுக்கு உள்ளாகியுள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர் . குறித்த சம்பவத்துக்கு இருவருக்கிடையிலான காதல் முரண்பாடே இந்தக் கொலைக்கு காரணமென தெரியவந்துள்ளது .

காதல் தொடர்பிலான முரண்பாட்டை விசாரணை செய்வதற்காக பிரச்சினையுடன் தொடர்புடைய பெண் மற்றும் ஆண் இருவரும் பொலிஸ் நிலையத்திற்கு வருகைதந்துள்ளனர் . இவற்றில் பெண்ணின் முன்னால் காதலனும் விசாரணை செய்யும் நோக்கில் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கபட்டுள்ளார் .

பெண்ணின் தற்போதைய காதலன் முன்னாள் காதலனை கூரிய ஆயுதத்தால் குத்தியுள்ளார் . தாக்கப்பட்ட நபர் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்தாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவிசாவலை கரவனெல்லா பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கொலையாளி கைதுசெய்யப்பட்டுள்ளார் . மேலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நவகமுவ பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது .

முன்னாள் காதலனை பொலிஸ் நிலையத்தினுள் கொலை செய்த இந்நாள் காதலன்

Social Share

Leave a Reply