ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஜோசெப் ஸ்டாலினுடன் பேசியுள்ளதாக தகவல்களை மேற்கோள்காட்டி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்டாலினின் கைது சட்டபூர்வமானது என அவருக்கு தெரிவித்துள்ள ஜனாதிபதி, சட்டத்தை மீறுபவர்களை பிரித்து பார்ப்பதில் சிக்கல் நிலை காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.
போராட்டங்களில் நல்ல பக்கமும், கெட்ட பக்கமும் உள்ளதாக ஸ்டாலினுக்கு தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில், நல்ல பக்கங்களில் மட்டுமே ஈடுபடவேண்டுமெனவும், போராட்டங்களில் கோரப்படும் முறைமை மாற்றத்தை தான் வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
