இங்கிலாந்தில் காணாமல் போன போட்டியாளர்கள்

பொதுநலவாய விளையாட்டு போட்டிகளுக்காக இங்கிலாந்துக்கு சென்ற 10 போட்டியாளர்கள் காணமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தில் குடியியுரிமை அல்லது அகதி அந்தஸ்து பெறுவதற்காக இவர்கள் இவ்வாறு காணாமல் போயிருக்கலாமென நம்பப்படுகிறது.

ஒரு முகாமையாளரும், 9 போட்டியாளர்களும் இவ்வாறு காணமல் போயுள்ளதாக தெரியவருகிறது.

காணாமல் போனவர்கள் தொடர்பில் இலங்கை அதிகாரிகளினால் இங்கிலாந்து காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் மூவர் இருக்குமிடங்களை காவற்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். இருப்பினும் அவர்கள் 6 மாத காலத்துக்கான விசாவினை கொண்டிருப்பதனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என காவல்துறை தெரிவித்துள்ளதாக இலங்கை அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்தோடு இலங்கை அதிகாரிகளுக்கு அவர்கள் எங்கேயுள்ளார்கள் என்பது தொடர்பிலும் காவல்துறையினர் தகவல்களை வழங்கவில்லை.

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் காணமல் போனவர்கள் தொடர்பில் தமக்கு புகார் கிடைத்துள்ளதாகவும், அவர்கள் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருக்கிறார்களா எனபதனை காவல்துறை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியாளர்கள், அதிகாரிகள், பயிற்றுவிப்பாளர்கள், முகாமையாளர்கள் என மொத்தமாக 160 நபர்கள் இலங்கை சார்பாக இங்கிலாந்து பயணமாகியிருந்தனர்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார சூழ்நிலை காரணமாக, இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்து குடியுரிமையினை பெற்றுக் கொள்ளவே இவர்கள் இவ்வாறு செயற்பட்டுள்ளார்கள் என நம்பப்படுகிறது.

இங்கிலாந்தில் காணாமல் போன போட்டியாளர்கள்

Social Share

Leave a Reply