இலங்கை கிரிக்கட் சிவப்பு மற்றும் சாம்பல் அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சிவப்பு அணி அபாரமான வெற்றியினை பெற்றுக்கொண்டது.
நாணய சுழற்சயில் வெற்றி பெற்ற சிவப்பு அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய சாம்பல் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களை பெற்றது. இதில் மொவின் சுபசிங்க 32(25) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் அஷித பெர்ணான்டோ 4 விக்கெட்களையும், மதீஷ பத்திரன, மஹேஷ் தீக்ஷண ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றிக்கொண்டார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய சிவப்பு அணி 16.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 121 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றுக்கொண்டது. இதில் லசித் க்ரூஸ்பிள்ளே 54 ஓட்டங்களையும், குஷல் மென்டிஸ் ஆட்டமிழக்கமால் 34 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அகில தனஞ்செய 2 விக்கட்களையும், புலின தரங்க 1 விக்கெட்டினையும் கைப்பற்றிக்கொண்டார்கள்.
அசித்த பெர்னாண்டோ போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
இரண்டாவது போட்டி நீலம் மற்றும் பச்சை அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.
