வழமைக்கு திரும்பும் மண்ணெண்ணெய் விநியோகம்!

எதிர்வரும் காலங்களில் மண்ணெண்ணைக்கான தட்டுப்பாடு குறையுமென இன்று பாராளுமன்றத்தில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்தார். வரும் 13 ம் திகதி மசகு எண்ணெய் கப்பல் ஒன்று நாடிற்கு வரவுள்ளது. அதன் பின் 15 ஆம் திகதிமுதல் மீண்டும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பமாகும்,19 ம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 29 ம் திகதி இன்னுமொரு மசகு எண்ணெய் கப்பல் நாட்டை வந்து சேரவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வழமைக்கு திரும்பும் மண்ணெண்ணெய் விநியோகம்!

Social Share

Leave a Reply