-அகல்யா டேவிட்-
மதுபோதையுடன் ஆழமான வாவியை நடந்து கடந்து செல்ல முற்பட்ட மட்டக்களப்பு – தேவபுரம் – முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச்சேர்ந்த 60 வயதுடைய தில்லைநாயகம் கிருஷணபிள்ளை எனும் விவசாயி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவமொன்று மட்டக்களப்பு – சந்திவெளி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இவரது சடலம் ஞாயிற்றுக்கிழமை (26.09.2021) மீனவர்களது உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது. இவர் (25) மாலை வாவியோரம் சைக்கிளை நிறுத்திவிட்டு நடந்து வாவியைக் கடந்துசெல்ல முற்பட்டவேளை சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திடீர் மரண விசாரணையதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்தார். ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து பலரிடம் வாக்கு மூலங்களைப் பதிவுசெய்தனர்.
