அமெரிக்க அதிபரான ஜோ பைடனின் உறவினர்கள் இந்தியாவில் வசிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மற்றும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவ்விடயம் தொடர்பாக அமெரிக்க துணை அதிபராக ஜோ பைடன் பதவி வகித்த காலப்பகுதியில் இந்தியாவிற்கு வந்திருந்தபோது இந்தியப் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.
இதயடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடனைச் சந்திக்கும் போது அவரது இந்திய உறவினர்கள் தொடர்பான ஆதாரங்களை பிரதமர் மோடி அவரிடம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அமெரிக்க ஊடகங்கமொன்றில் அமெரிக்க அதிபரின் பூர்வீகம் தொடர்பாக அறிந்துகொள்ளக்கூடியவகையில் மர்ம முடிச்சுக்கள் அவிழ்க்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் ஊடகங்களில் குறிப்பிட்டதாவது,
அமெரிக்க துணை அதிபராக ஜோ பைடன் பதவி வகித்த காலப்பகுதியில் இந்தியாவிற்கு வந்திருந்தபோது “எனது மூதாதையரான கேப்டன் ஜார்ஜ் பைடன் பிரிட்டனின் கிழக்கு இந்திய கம்பெனியில் பணியாற்றி உள்ளார். பழங்காலத்தில் பிரிட்டனுக்கும் அயர்லாந்துக்கும் இடையே மோதல் இருந்தது. அந்த வகையில் எனது மூதாதையரான அயர்லாந்துகாரர், பிரிட்டிஷ் நிறுவனத்தில் பணியாற்றியதை ஏற்றுக்கொள்வது கொஞ்சம் கடினம்தான். இந்தியாவில் அவர் பணியாற்றியபோது இந்திய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். நான் முதல்முறையாக செனட் எம்.பி.யாக பதவியேற்றபோது மும்பையில் இருந்து எனக்கு பாராட்டு கடிதம் வந்தது. அதை எழுதியவர் பைடன் எனக்குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், எனது பணிச்சுமை காரணமாக அந்த கடிதத்தை எழுதியவரை தேடாமல் விட்டுவிட்டேன்” என்றார்.
அதற்கமைய தற்போது அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்துப் பேசியுள்ளார் இதன்போது தனது இந்திய உறவுகளையும் பூர்வீகம் தொடர்பாகவும் அதிபர் பைடன் நினைவுபடுத்திய வேளை நரேந்திர மோடியால் பைடனின் உறவினர்கள் மும்பை இருப்பதாக கூறி அது தொடர்பான முக்கிய ஆவணங்களை பைடனிடம் கையளித்ததுடன் இது தொடர்பில் மேலும் விசாரிக்கமுடியும் எனவும் கூறியுள்ளார்.
