சீனா கப்பல் யுவான் வோங் 05, நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையுமென தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை அந்த கப்பல் வருகை தரவில்லை. குறித்த கப்பல் வருவதில் தாமதம் ஏற்படுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை அரசாங்கம், இந்தியா அழுத்தம் காரணமாக சீனாவிடம் கப்பல் வருகையினை பிற்போடுமாறு கோரியிருந்தது. அதன் காரணமாக சீனா டைகாங் துறைமுகத்திலிருந்து கிளம்பிய கப்பல் 35 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து 599 கடல் மைல்கள் தூரத்தில் காணப்படுவதாக நோர்வேயின் செய்மதி தகவல் சேகரிப்பு நிறுவனமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த கப்பல் இலங்கை வந்தடைவதற்கான குறிக்கோளுடனேயே காணப்படுவதாக இந்திய பாதுகாப்பு பிரிவு மற்றும் பாதுகாப்பு அமைப்பினை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
