இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம் அமிர்த பெருவிழாவாக கொண்டாட்டம்.

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று இந்தியாவில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிது. இதை கோலாகலமாக கொண்டாடும் வகையில், ஒன்றிய அரசு அமிர்த பெருவிழாவாக ஓராண்டுக்கு கொண்டாட முடிவு செய்தது. அதன்படி, நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடை வதையொட்டி, பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று, நாடெங்கிலும் மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி நாட்டின் 75வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியினை பிரதமர் மோடி ஏற்றி சுதந்திர தின நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். செங்கோட்டையில் தொடர்ச்சியாக 9வது முறையாக பிரதமர் மோடி சுதந்திர தின விழாவில் தேசியக் கொடி ஏற்றியுளார். கடந்த 2 ஆண்டுகள் கொரோனா பாதிப்பு காரணமாக, சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் பெரியளவில் இடம்பெறாத நிலையில், இந்த வருட ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்க 7,000 பார்வையாளர்களுக்கும் விசேட அதிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்னதாக அவர் காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியதை தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பிரதமர் மோடி தேசிய கொடியேற்றியபோது வானில் ஹெ லிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.

சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு இந்தியாவின் பாதுகாப்பு மிக அதிகமாக காணப்படுகின்றன. கடந்த சில நாட்களாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள அதேவேளை, விமான நிலையங்களிலும் பாதுகாப்பு மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளது. இன்றைய விசேட நிகழ்வு நடைபெறும் செங்கோட்டையில் உச்ச கட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு 10 ஆயிரம் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும், 1000 கண்காணிப்பு கமராக்கள் மூலமாக தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் முதல்வர் மு.கா ஸ்டாலின் தேசிய கொடியினை ஏற்றி சுதந்திர தின நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.

Social Share

Leave a Reply