இலங்கையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயமுள்ளது. அரிசி உற்பத்தியாளர்கள் அரிசி உற்பத்தியினை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளமையே இதற்கு காரணம்.
அரிசியின் கட்டுப்பாடு விலை நிர்ணயிக்கப்பட்டமை மற்றும் அவசரகால சட்டத்தின் மூலம் நுகர்வோர் அதிகாரசபையின் அரிசி தயாரிப்பு இடங்களை சுற்றி வளைத்தது சோதனையிட்டு புதிய சட்டத்தை உருவாக்கி அபராத தொகை 1000 ரூபாயிலிருந்து 100,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்ட சில அரிசி விற்பனையாளர்கள் அரிசி விற்பனையிலிருந்து விலகியுள்ளனர்.
இந்த காரணங்களுக்காகவும், அரசாங்கம் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அதிகரிக்காவிடின் அரிசி உற்பத்தியாளர் சங்கம் அரிசி உற்பத்தியினை நிறுத்த தீர்மானித்தமையே அரிசி தட்டுப்பாடு ஏற்பட காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசியின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இல்லாவிடில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. அனைத்துமே சாதரண மக்களுக்கு பாதகமான விடயங்களே.
