IPL – சென்னை அடுத்த சுற்றில். கேள்விக்குறியாகியுள்ள மும்பை

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் போட்டிகள் மிக முக்கியமான கட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறன. அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை பெறுவதும், இழப்பதுமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினம் சென்னை சுப்பர் கிங்ஸ், கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இரண்டு விக்கெட்களினால் வெற்றி பெற்று 16 புள்ளிகளை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுள்ளது.

முதலில் துடுப்பாடிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களை பெற்றது. ராகுல் திருப்பதி 45(33) ஓட்டங்களை பெற்றார். ஜோஸ் ஹெசல்வூட், சர்தூல் தாகூர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 172 ஓட்டங்களை பெற்றது. இதில் பப் டு பிளேஸிஸ் 43(30) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் சுனில் நரையன் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

இரண்டாவது போட்டியில் பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியினை இலகுவாக 54 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பாடிய பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்கள் 6 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது. இதில் கிளன் மக்ஸ்வெல் 56(37) , விராத் கோலி 51(42) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பாடிய மும்பை இந்தியன் அணி 18.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 111 ஓட்டங்களை பெற்றது.

புள்ளி பட்டியல்

IPL - சென்னை அடுத்த சுற்றில். கேள்விக்குறியாகியுள்ள மும்பை
IPL - சென்னை அடுத்த சுற்றில். கேள்விக்குறியாகியுள்ள மும்பை

Social Share

Leave a Reply