சீன கப்பல் இலங்கையில்

சீனாவின் விஞ்ஞான ஆய்வு கப்பல் யுவன் வோங் 05 இன்று(16.08) இலங்கை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்துள்ள கப்பல் ஐந்து தினங்கள் இங்கேயே தரித்து நிற்கவுள்ளது. எரிபொருள் மற்றும் இதர தேவைகளை மீள் நிரப்புகை செய்வதற்காக இந்த கப்பல் இலங்கை வரவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியா, இந்த கப்பல் வருகைக்கு எதிர்ப்பினை வெளியிட்ட நிலையில், கடந்த 11 ஆம் திகதி வருகை தரவிருந்த கப்பலை தாமதிக்குமாறு சீனாவிடம் இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது. சீன கப்பலின் வருகைக்கான காரணங்களை இலங்கை அரசாங்கம் மீள உறுதி செய்ததன் பின்னர் இலங்கைக்குள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

வருகை தந்துள்ள கப்பலை சீன தூதரகம் வரவேற்பதற்கான நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கப்பல் நவீன விஞ்ஞான உபகரணங்கள் பொருத்தப்பட்ட செய்மதி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் கப்பல் என கூறப்படுகிறது.

சீன கப்பல் இலங்கையில்

சீன விஞ்ஞான ஆய்வு கப்பல் இலங்கை வந்து சேர்ந்தது.

சீனாவின் விஞ்ஞான ஆய்வு கப்பல் யுவன் வோங் 05 இன்று இலங்கை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்துள்ள கப்பல் ஐந்து தினங்கள் இங்கேயே தரித்து நிற்கவுள்ளது. எரிபொருள் மற்றும் இதர தேவைகளை மீள் நிரப்புகை செய்வதற்காக இந்த கப்பல் இலங்கை வரவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியா, இந்த கப்பல் வருகைக்கு எதிர்ப்பினை வெளியிட்ட நிலையில், கடந்த 11 ஆம் திகதி வருகை தரவிருந்த கப்பலை தாமதிக்குமாறு சீனாவிடம் இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது. சீன கப்பலின் வருகைக்கான காரணங்களை இலங்கை அரசாங்கம் மீள உறுதி செய்ததன் பின்னர் இலங்கைக்குள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

வருகை தந்துள்ள கப்பலை சீன தூதரகம் வரவேற்பதற்கான நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கப்பல் நவீன விஞ்ஞான உபகரணங்கள் பொருத்தப்பட்ட செய்மதி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் கப்பல் என கூறப்படுகிறது.

Social Share

Leave a Reply